பிரபல குணச்சித்திர நடிகர் கொரோனவால் உயிரிழந்தார்..! வருத்தத்தில் திரையுலகினர்..

விஜய்யின் புதிய கீதை படம் மூலம் நடிகர் ஆனவர் ஃப்ளோரனட் பெரேரா. கயல் கயல் படத்தின் ஜமீந்தாராக நடித்து கவனத்தை ஈர்த்தவர் பிளோரோ பெரேரா. அந்த படத்தில் வில்லத்தனமான இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர வரிசையாக பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார். என்கிட்டா மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017),ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஃப்ளோரன்ட்.

படங்களில் நடித்து வந்தாலும் கலைஞர் டிவியின் ஜெனரல் மேனஜராக இருந்து வந்தார் ஃப்ளோரன்ட் பெரேரா. ஃப்ளோரன்ட் பெரேரா அண்மையில் தான் பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில், திடீரென காய்ச்சல் வரவே கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு பெரேராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் நேற்றிரவு (செப்டம்பர் 14) உயிரிழந்தார். அவருக்கு வயது 67. ப்ளோரன்ட் பெரேரா உயிரிழந்த செய்தி அறிந்த திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். இவரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.