பிரபல காமெடி நடிகர் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்க போகிறாரா? வெளியான தகவல்..

விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது.

ஹிந்தியில் 14வது சீசன் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது, தமிழில் இன்னும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி வெளியிடவில்லை. தற்போது தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதாவது பிரபல காமெடி நடிகர் அமுதவாணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மை தானா என்பதை நிகழ்ச்சி தொடங்கும் போது பார்ப்போம். இவரை தவிர ரம்யா பாண்டியன், புகழ், விஜே மணிமேகலை, ஷிவானி, டிக் டாக் பிரபலம் இலக்கியா போன்றோர் பங்குபெற இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.