பிரபல இயக்குனர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடிகளா..!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் இயக்குனர் அட்லீ.  ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்தவர் அட்லீ. இதன்பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் சூப்பர் ஹிட் மாஸ் கூட்டணியை அமைத்தார்.

மேலும் மீண்டும் மீண்டும் விஜய்யுடன் மெர்சல், பிகில் என வெற்றி இதுவரை மூன்று சூப்பர் ஹிட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் படங்களை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்க திட்டமிட்டுள்ள அட்லீ, அதற்கான பணியில் மிகவும் மும்முரமாக இடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீயின் திரைப்பயணத்தை பற்றி நாம் அறிவோம், ஆனால் அவரின் முழு சொத்து மதிப்பு என்ன, அவர் ஒரு படத்திற்க்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

இதோ நீங்களே பாருங்கள். இயக்குனர் அட்லீ, பிகில் படத்திற்காக சுமார் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அட்லீயின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 50 கோடி என தெரிவிக்கின்றனர். மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி யுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!