தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். அஜித் படம் என்றாலே திருவிழா காட்சியளிக்கும் தியேட்டர்கள். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். ரசிகர்கள் பட்டாளத்தை தாண்டி குடும்ப பாங்கான அதுவும் குடும்ப படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தும் வருகிறார் தல அஜித்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதி விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வம் தற்போது தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் வலிமை முடிந்து அஜித் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக நடிக்கவுள்ளார், இப்படத்தை சூரரை போற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் அவருடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டிங் ஆக உள்ளது, இது உண்மையா என்பது அஜித் தரப்பு சொன்னாலே உண்டு.