பிரச்சாரத்தில் பேச்சை நிறுத்திய கமல்.. ஆரி ஆரி என கோசமிட்ட மக்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை முதல் ஆளாக துவங்கியவர் கமல் தான். இதுவரை ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது மறைவுக்குப் பின்பு நடக்கும் முதல் தேர்தல் இது. தமிழகத்தில் இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த கமல் அரசியலில் குதித்த பின்பு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. ஊர், ஊராக போய் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார் பேசிவருகிறார். இந்நிலையில் இப்போது கூட்டத்துக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற கமலிடம் கூடியிருந்த கூட்டம் ஆரி..ஆரி என கோசமிட்டது. இதனால் கமல் தனது பேச்சை நிறுத்திவிட்டு என்ன எனக் கேட்டார். அப்போது பிக்பாஸ் என கூடியிருந்தவர்கள் கோசமிட்டனர். அதன் பின்னர் சிரித்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினார் கமல். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *