பிரசவத்தில் வலியால் துடிதுடித்த பெண் வெளிவந்த நாகா பாம்பு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..என்ன நடந்தது தெரியுமா ???

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரையில் குழந்தை இல்லை.குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு

சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்துவந்தார் தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.

 

இதற்கிடையே போலீசார் 108 அம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பிரசவ வலியால் துடித்துள்ளார் ஆனால் அன்று குழந்தை பிறக்கவில்லை . இருப்பினும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.பின்னர் அங்கு பரிசோதனை நடைபெற்ற மருத்துவர்கள் உள்ள அறையில் ஜன்னல் வழியாக ஒரு கருநாக பாம்பு ஒன்று வந்துள்ளது.இதனை கண்ட மருத்துவர்கள் அனைவரும் உறைந்து போய் நின்றனர்.பின்னர் பூசாரி சொன்னது போல பாம்பு வெளிவந்துள்ளது இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *