பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டாக வெளியே வந்தது! அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு விபரீதம்!

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலை தனியே துண்டான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலூர் காலனியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டார். பிரசவ வலி அதிகரித்த நிலையில், இரவுப் பணி மருத்துவர் இல்லாததால் செவிலியர் முத்துக்குமாரியே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சரிவர கையாளாததால் குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. இதையடுத்து 20 வயதே ஆன பொம்மி, செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தாய்க்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கல்பட்டு

அரசு மருத்துவமனையில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே செவிலியர் முத்துகுமாரியிடம் கூவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!