பிக் பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை! கதறி அழும் அனிதா.. வெளியான புதிய ப்ரோமோ!

பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 தேதி உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிலையில் செய்திவாசிப்பாளர் அனிதா தனது பாணியில் பிக் பாஸ் வீட்டைப் பற்றி செய்தி வாசித்து காட்ட அதை கலாய்கின்ற தோனியில் சுரேஷ் பேசியது பிக் பாஸ் வீட்டுக்குள் இப்பொழுது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

இதில் கொண்டாட்டங்களை தாண்டி பிரச்சனைகள் அதிகம் நடப்பதாக தெரிகிறது. அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூடு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும். இருவருரிடமும் இடையேயான பஞ்சாயத்து அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியானது. இதில் ” தன்னை சுரேஷ் சக்ரவத்தி ட்ரிகர் செய்கிறார் என்றும் எனக்கு தேவையில்லாத கேட்ட பெயரை வரவைக்கிறார் என்று கூறுகிறார் அனிதா சம்பத் “.

இன்று வந்த புரொமோவில் அனிதா சம்பத் தனது வாழ்க்கை பயணத்தை கூறி அழுகிறார். அதோடு நான் கஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளேன் என கதறி அழுகிறார். அவருக்கு வீட்டில் இருக்கும் சிலர் ஆறுதல் கூறுவது இன்று வெளிவந்துள்ள புரொமோவில் தெரிகிறது. இதோ அந்த புதிய புரொமோ,

 

Leave a Reply

Your email address will not be published.