பிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை! சுரேஷ் சக்ரவர்த்தியை எச்சரித்த ரியோ! வெளியான இரண்டாவது ப்ரோமோ..

பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரியோ, அறந்தாங்கி நிஷா, சனம், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி என 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் தினமும் இணையத்தில் வெளியாகும் ப்ரோமோக்கள் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், கமல் போட்டியாளர்களை சந்தித்து, செம்ம டோஸ் கொடுத்தார். அடிக்கடி ப்ரோமோகளில் சண்டையிட்டுகொள்ளும், அனிதா மற்றும் சுரேஷ் வாக்குவதாங்களை கேட்டு சமாதான ஆகும் படியும் அறிவுரை வழங்கியிருந்தார். இதையடுத்து, ரசிகர்களின் கனவு கன்னியான ஷிவானி ஆரம்பத்தில் இருந்தே அமைதி காத்து வந்தார்.

இவர் போட்டியாளர்களுடன் சரியாக உரையாடுவதில்லை என பலரும் ஹார்ட் ப்ரேக் குத்தியிருந்தார்கள். அந்த வகையில் தற்போது சுரேஷ் சகஜராவர்த்தி பிக்பாஸ் வீட்டில் முகமூடி போட்டுள்ளவர்கள் என ரியோவை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். இதற்கு ரியோ மிகவும் கடுமையாக யாரைவேனாலும் எடுத்துக்காட்டாக கூறலாம், ஆனால் என்னை எடுத்துக்காட்டாக சொல்லக்கூடாது என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.