கொரோனா என்ற பெரிய போராட்டத்திற்கு நடுவில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம். கடந்த மூன்று சீன்களை போலவே இந்த பிக் பாஸ் சீசன் 4 உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருப்பதால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். இதில் ரியோ ராஜ், நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா, சீரியல் நடிகர் ஷிவானி, பின்னணி பாடகர் வேல் முருகன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது வரை 3 புரொமோக்கள் வெளியாகிவிட்டது. ஒன்று பிரபலங்களின் ஆட்டம், பாட்டத்துடன் கூடிய வீடியோ, ஒன்றாங்க சேர்ந்து விளையாடிய வீடியோ, மற்றொன்று கொஞ்சம் சீரியஸான புரொமோ. இந்த நிலையில் தான் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல சீரியல் நடிகை நுழைந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்குள் குறைந்த பச்சம் 8 நபர்கள் வந்த பிறகு அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது , நடிகர் ரியோ மட்டும் பிரியாணியை சாப்பிட்டு கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் சம்பவம் செய்த ரியோ ராஜ் என கூறி வருகின்றனர்.