பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 தேதி உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழந்தைக்கு நடந்த விபத்து குறித்து கூறி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்து விட்டார். ஒவ்வொரு பிரபலங்களும் தங்கள் சொந்தக் கதை சோகக் கதைகளை கூறியுள்ளனர்.
இதன் போது நிசா, என்னோட வொர்க்க அவ்வளவு லவ் பண்ணேன் அதனால, பாப்பாவுக்கு செங்கல்பட்டு கிட்ட ஆக்சிடன்ட் ஆகிடுச்சு என சொல்லி கண்ணீர் சிந்தும் அவரை பார்த்து அனைவரும் அழுகின்றனர். அதன் பின்னர், இந்த உலகத்துல அழகா இருக்கவன் சாதிக்கிறதை விட, அவமானப்பட்டவன் தான் அதிகமா சாதிச்சு இருக்கான். நான் அதிகமா அவமானப்பட்டு இருக்கேன் நான் சாதிச்சிக்கிட்டே இருப்பேன்.. யாரும் எந்த இடத்துலயும் துவண்டு போயிடாதீங்க என கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதுவும் கருப்பான இருப்பதால் பாடசாலை நாட்களில் அனைவரும் ஓரம் கட்டியதாகவும், முன் வரிசையில் இருந்த அனைவரும் தற்போது அடையாளம் தெரியாமல் சென்று விட்டதாகவும், அடையாளம் தெரியாமல் ஓரம் கட்டப்பட்ட நான் இன்று அனைவருக்கும் முன் நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் சோக கதைகளை கேட்டு ரியோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.