பிக் பாஸ் ப்ரொமோ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி..! கடுப்பான ரசிகர்கள்

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியானது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 27 அல்லது அதாவது 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ப்ரொமோவின் மேக்கிங் வீடியோவை பிரபல தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இந்த வீடியோவை இப்போ நாங்கள் கேட்டோமா?

பழைய ப்ரொமோ வீடியோவை திரும்ப வெளியிடுவது, அதன் மேக்கிங் வீடியோவை போஸ்ட் செய்வது என்று கடுப்பேற்றுகிறார்கள். மேக்கிங் வீடியோவை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?. மொக்கை போடாதீங்க. புது ப்ரொமோ வீடியோவை கேட்டால் மேக்கிங்கா வெளியிடுகிறீர்கள். போங்கய்யா நீங்களும் உங்கள் பிக் பாஸும் என்று ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.