சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீன்களும் மிக வெற்றிகரமாக ஓடி மக்களிடையே நல்ல வரப்பெற்றது. இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி தொடங்கும் இல்லையா என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் நேற்று மலை 6 மணியளவில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கப்பட்டது. கடந்த மூன்று சீனர்களை போலவே இந்த சீனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியோ, அறந்தாங்கி நிஷா, ஷிவானி, சனம் ஷெட்டி என பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ள மற்றொரு ஹீரோ போட்டியாளர் நம்ம ஜித்தன் ரமேஷ். தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனான இவர் ஜித்தன், ஒஸ்தி, ஜெர்ரி, ஜித்தன் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார். சமீப காலமாக பெரிதாக திரைப்படங்களில் தலைக்காட்டாத ஜித்தன் ரமேஷ், தற்போது பிக்பாஸ் போட்டியாளராக நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர் ஜீவாவின் சகோதரரான இவர், வித்யார்த்தி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வில்லை என்றால் ஒரு வேலை டைவஸ் கூட ஆகியிருக்கும் என்று சுவாரஷ்யமாக பதில் கூறியுள்ளார். இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரின் ஜித்தன் ரமேஷ் கலந்து கொண்டதற்கு வாழ்த்த சகோதரர் ஜீவா வீடியோ கால் மூலம் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.