விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 3 சாண்டி, முகேன், கவின், லொஸ்லியா, தர்ஷன், வனிதா என பலர் பங்கேற்று பிரபலம் ஆகினர். இதுபோக தர்ஷன் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்க போவதாகவும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

தர்சன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார். உலகெங்கிலும் உள்ள பல தமிழ் குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமாகி செல்லப்பிள்ளையாக மாறிப் போனவர் நடிகர் தர்ஷன். எதையும் துணிச்சலாக பேசும் பண்பை கொண்ட தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் மிகச் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர் கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் செப்டம்பர் 15 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.