ஜூலி மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தோன்றியதற்காக பிரபலமாக அறியப்பட்டார். பின்னர் அவர் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் தோன்றினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் தமிழின் பிரபலமல்லாத போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இந்நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதில் ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆர்மி வைக்க தொடங்கினர். பின்னர் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் ஜூலி.
ஜூலி ஒரு செவிலியர் ஆவார். பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகு, மன்னர் வகைராவில் விமல் மற்றும் பிந்து மாதவி ஆகியோருடன் அறிமுகமானார். தற்போது பிக் பாஸ் ஜூலியின் லேட்டட்ஸ் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் திருமண பெண் போல அலங்காரம் செய்தபடி உள்ளார். இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் அழகா இருக்கீங்க ஜூலி என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும் முடிந்துவிட்டது.
இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன. அவர்கள் வழமை போல ஜூலியை திட்டி வருகின்றனர்.