விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் பிக் பாஸிற்கு பிறகு விமல் நடித்த படம் ஒன்று சிறியதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் தற்போது அம்மன் தாயி மற்றும் நீட் தேர்வால் இறந்து போன அனிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என நடித்து வருகிறார். சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்கள் ஈர்த்து வரும் ஜூலி திருமணம் கோலத்தில் மற்றும் மார்டன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது மிகவும் மார்டனாக முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது! இது பிக் பாஸ் ஜூலியா என ஷாக்காகி கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..