பிக் பாஸ் சரவணனா இது! கோட்சூட், கூலர் என மார்டனாக மாறிய சித்தப்பு.. வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. இவ்வாறு இவற்றில் 3 சீசன் முடிவடைந்தாலும் ஒவ்வொரு சீசனுக்கும் பஞ்சமே இல்லாமல் சர்ச்சைகள் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சித்தப்பு சரவணன். சரவணன் அவர்கள் வீட்டில் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேறியது தான் மிகவும் ஷாக்கிங்காக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணனின் வெளியேற்றம் மிகவும் ரகசியமாகவும், சர்ச்சையாகவும் இருந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சித்தப்பு படங்களில் கமிட்டாகி நடிக்க பிஸியாகி விட்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தமாக அப்போதே கூறியிருந்தார்.

நடிகர் சரவணன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ப சரவணனா என்று இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு அவரின் கெட்டப்பை மாற்றியுள்ளார். இனியாவது அவருக்கு படவாய்ப்புகள் அமையுமா என்று பார்க்கலாம்.

 

 

View this post on Instagram

 

Singam kalam erangiduchiiii ?? chithappu is back ? @njsatz

A post shared by SANDY (@iamsandy_off) on

Leave a Reply

Your email address will not be published.