பிக் பாஸ் சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்க பட்ட நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், ஓவிய, ஸ்நேஹன், சக்தி, காயத்ரி, ஹரிஷ் கல்யாண் என் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி காயத்ரியின் நண்பராக அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததால் பார்வையாளர்களிடையே விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டார்.

சக்தி தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பி.வாசுவின் மகன். தனது தந்தை இயக்கிய சின்னத்தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்த சக்தி, தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு படங்கள் எதுவும் நடிக்காமலிருக்கும் நடிகர் சக்தி அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் ஆரவ் திருமணத்திற்கு மகனுடன் கலந்து கொண்டுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகனா என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.