பிக் பாஸ் ஆரவ் காதல் மனைவி பற்றி உருக்கமான பதிவு! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். அதிலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’, விஜய் ஆண்டனியுடன் ‘சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். இந்நிலையில் ஆரவ்வும், ராஹி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்தடன் கடந்த 6ம் திகதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர்.

இதையடுத்து இணையத்தில் வெளியான இந்த கல்யாண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், தனது காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆரவ், ‘இமைபோல் காப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.