பிக் பாஸ் ஆரவ்க்கு திருமணம் முடிஞ்சாச்சு! சோகத்தில் ஓவியா ரசிகர்கள்.. வெளியான திருமண புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். அதிலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’, விஜய் ஆண்டனியுடன் ‘சைத்தான்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் ஆரவ்க்கும் இளம் நடிகை ராஹி என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண நிகழ்வில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர். இதையடுத்து இணையத்தில் வெளியான இந்த கல்யாண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியா வர வில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மாத்திரம் இல்லை, பிக் பாஸ் வீட்டில் ஓவியா ஆரவ்வை காதலித்தார். நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த இருவரும் சந்தித்து பேசி கொண்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர். எனினும், அது நட்பாக தொடர்ந்த நிலையில் இன்று ஆரவ்க்கு திடீர் திருமணம் நடந்து முடிந்துள்ளமை ஓவியாவின் ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

Mere dosth ki Shaadi hai…. @actorarav #raahei ❤️? @itssujavarunee @gayathriraguramm @actress_harathi @iamharishkalyan #snehan

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on

Leave a Reply

Your email address will not be published.