பிக் பாஸில் தான் கடந்து வந்த பாதை பற்றி உருக்கமாக பேசிய ஆரி! ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த சோகம்..

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி பேசினார்கள். ஆரி பேசிய விடயங்கள் ரசிகர்கள் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

தான் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தின் இறுதி சூட்டிங் நேரத்தில் எனது தாய் இறந்து விட்டார். அந்த சோகத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து விட்டுதான் அம்மாவை பார்க்க சென்றேன். காரணம் எனது அம்மா நான் ஒரு நல்ல இடத்திற்கு செல்ல அதிக கஷ்டப்பட்டார்கள். கடைசி நொடியில் அவரின் கஷ்டம் வீணாக கூடாது. அம்மாவுக்காக இதையாவது செய்யலாம் என்று நினைத்தேன் என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.

இதேவேளை, எனது தாயை இழந்த சோகத்திலும் மேலானதாக சில ஊடகத்தில் வெளிவந்த செய்திகள் இருந்தது. தாயின் மரணத்தில் சம்பாதிக்கும் நடிகர் என்று போட்டிருந்தார்கள். அது என்னை மிகவும் தாக்கியது. எனக்கு என்று ஒரு அடையாளத்தினை தேடி கொள்ளவும் அம்மாவின் ஆசைக்காகவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று மிகவும் உருக்கமாக பேசி ரசிகர்களையும் ஆரி கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!