பிக் பாஸில் அடுத்த எலிமினேஷன் லிஸ்ட் ரெடி! கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறும் சுரேஷ்! வெளியான புதிய ப்ரோமோ..

பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. தற்போது நிகழ்ச்சி தொடங்கி 4 நாட்களே ஆனா நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே ஒரே சண்டையாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை போட்டியாளர்கள் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வாக்குவாதம் மட்டுமே சென்றுக்கொண்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள்.

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ப்ரோமோவில் ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இன்று வெளியான அடுத்த ப்ரோமோவில், சுரேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் வெறுப்படைந்த சுரேஷ் என்னுடையது வந்து 100% சரிதான் என வீட்டை விட்டு வெளியேறுவதுபோல் நடந்து செல்கிறார். எப்படியும் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published.