தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகநாயகன் கமல்ஹாசன் தான் கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் தொகுப்பாளர். பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியானது.
ஆனால் எப்போது தொடக்கம், யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எல்லாம் இன்னும் எதுவுமே தெரியவில்லை. நாளுக்கு நாள் போட்டியாளர்கள் என்று புதிய புதிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 27 அல்லது அதாவது 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீரியல் பிரபலங்களான சஞ்சீவ்-ஆல்யா இருவரும் இணைந்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்காக ஒரு நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தான் இவர்கள் நடனம் ஆடியிருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். இதோ அந்த அழகிய நடன வீடியோ,