பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை! ஆரியிடம் பொங்கி எழுந்த பாலா- வெளியான ப்ரோமோவால் ஷாக்கில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் பிக்பாஸில் இந்த வாரம் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நடந்தது. பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.

போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 4ல் பிரீஸ் டாஸ்க் நடந்து முடிந்த வேளையில் இன்று நாமினேஷன் ப்ரஸ்ஸஸ் நடக்கிறது. அதில் ஆரி, பாலாவை நாமினேட் செய்கிறார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சுவாரசியம் குறைவாக இருப்பதாக ஆரி மற்றும் பாலா இருவரும் ஓய்வு அறைக்குச் சென்றுள்ளனர். போட்டியாளர்கள் தெரிவு செய்யும் போதே ஆரி மற்றும் பாலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது ஒய்வு அறையில் இவர்களின் சண்டை படுபயங்கரமாக நடைபெற்றுள்ளது. இதில் ஆரி சோம்பேறித்தனமாக என்ற வார்த்தையை விட்டதால், பாலா கோபத்தின் உச்சத்திற்கு சென்று, எல்லாரும் அவங்க உழைப்பைப் போட்டுட்டு இருக்கோம் என்று பயங்கரமாக பேசியுள்ளார். என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.