பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நடந்த ஓபன் நாமினேஷன்!! சேலஞ்ச் விடும் போட்டியாளர்- ப்ரோமோ 2

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் பிக்பாஸில் சென்ற வாரம் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நடந்தது. பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.

போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. வெளியான முதல் ப்ரோமோவில் சோம், பாலா மற்றும் ஆரிய அவர்களின் சண்டை காரணங்களை குறி நாமினேட் செய்ய பின்னர் ரியோ ஆரிய நாமினேட் செய்தனர். இதில் ஆரி மற்றும் பாலா அதிகமான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஆரி ஒரு தோரணையுடன் நடந்துகொள்வதாகவும், மக்கள் உங்களை என்ன செய்கிறார்கள் பாருங்க என்று தோரணை காட்டுவதாக ரியோ கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் யார் வெளியேறப் போகிறார்கள்? யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக நிலவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.