தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல டிவியில் தற்போது நான்காவது சீசனை தொடங்குகிறது. ரசிகர்கள் பலரும் இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவார்கள், பிக்பாஸ் சீசன் 4 வீடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 4 மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று கூறப்பட்டவர்கள் அனைவருமே நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். இதில் ரியோ ராஜ், நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா, சீரியல் நடிகர் ஷிவானி, பின்னணி பாடகர் வேல் முருகன், ஜித்தன் ரமேஷ், ஆஜித், சனம் ஷெட்டி, சமுயுக்த, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ரம்யா பாண்டியன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ரசிகர்களும் போட்டியாளர்களை பார்த்து கொஞ்சம் எதிர்ப்பார்ப்பில் தான் இருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகிவிட்டது. முதல் நாள் முதல் பாடலே விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். பிரபலங்கள் அனைவரும் பாடலுக்கு செம குத்தாட்டம் போடுகிறார்கள். இதோ அந்த புரொமோ..