பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! எலிமினேட் ஆகப்போவது இவரா? வெளியான ப்ரோமோவால் ஷாக்கான ரசிகர்கள்..

பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தினமும் இணையத்தில் வெளியாகும் ப்ரோமோக்கள் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆரம்பித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்துள்ளது. போட்டியாளர்கள் சிலர் ஒருவரின் பெயரை அதிகம் கூறுகிறார்கள். அது யார் என்றால் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானி. இவர்களின் பெயர்கள் தான் அதிகம் போட்டியாளர்களால் கூறப்படுகிறது. இறுதியில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மகிழ்ச்சியான விஷயம் நடக்கிறதோ இல்லையோ அடுத்தடுத்து திடுக்கிடும் விஷயங்களை பிக்பாஸ் அறிவிக்கிறார். இந்த வாரம் எலிமினேஷக்கு தேர்வானவர்கள் சுயநலத்துடன் தேர்வு செய்து ஒருவரை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமாம். ஒவ்வொருவரும் ஒரு முடிவு கூறுகின்றனர், அவர்கள் கூறுவது பார்த்தால் மக்கள் எதிர்ப்பார்ப்பவர் வெளியேறுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்த புரொமோ கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. இன்றைய நிகழ்ச்சி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.