பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்..! வெளியான ப்ரோமோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக சண்டை இருந்த நிலையில் இப்போது போட்டிகள் நடந்து வருகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் வரவால் கலப்பாக மாறியுள்ளது. தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்ததுமே சுரேஷ் சக்ரவத்தி அவர்களை கலாய்த்து பல கலாட்டாக்களை செய்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நேற்று மக்களால் போட்டியாளர் ரேகா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் சென்றுகொண்டிருக்கின்றது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆரியையும், சுரேஷையும் குறிவைத்து நாமினேட் செய்து வருகின்றனர். மேலும் இந்த ப்ரொமொ காட்சியின் இறுதியில் சுரேஷ் அய்யய்யோ நீ ரொம்ப விஷமோ? என்று கூறியுள்ளார். சுரேஷ் இவ்வாறு கூறியுள்ளது யாரை என்று தெரியாத நிலையில் இன்றைய நாமினேஷன் சற்று பரபரப்பாக செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published.