பிக்பாஸ் வீட்டில் உச்சக்கட்ட வாக்குவாதம்! சுரேஷ் சக்ரவர்த்தியின் பேச்சால் கடுப்பான ரியோ!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் என கலப்பாக இல்லாமல் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சுரேஷ் சக்கரவர்த்தி, போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வருகிறார்.

இதில், அனிதா சம்பத், ரியோ இவர்களை தொடர்ந்து வேல்முருகனையும் பயங்கரமாக கோபப்பட வைத்துள்ளார் சுரேஷ். அந்த வகையில் தற்போது வெளியான அடுத்த ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி “மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் சேர்ந்து என்னை ஒதுக்குறாங்க” என குற்றம் சாட்டுகிறார். அதற்கு, போட்டியாளர்களான ரியோ, சனம் பதிலடி கொடுக்க, யாரும் குறுக்கே பேசாதீங்க நான் பேசுறேன் என ரியோ சொல்ல சொல்ல சனம் பேசியதால் கடுப்பாகி ஷோபாவை குத்திவிட்டு செல்கிறார்.

இதனால் ரியோராஜ் உள்ளிட்ட மற்ற ஹவுஸ் மேட்ஸ்களும் செம கடுப்பாகியுள்ளனர், மேலும் ரியோ பேசிக்கொண்டே இருக்கும் பொது சுரேஷ் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இதனால், இன்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் இடையேயான பிரச்சினை பெரியதாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.