விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் வித்தியாசமான டாஸ்குகளை ஹவுஸ்மேட்ஸ்க்கு கொடுத்து வருகிறார் பிக் பாஸ். இந்நிலையில் கடந்த வாரம் தொகுப்பாளினி அர்ச்சனா எலிமினேட் ஆனார்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பால் கேட்ச் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. பின்னர் இதன் அடிப்படையில் ஆரி, சோம் மற்றும் ரியோ என மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆரி அர்ஜுனன் இந்த வாரத்தின் தலைவர் ஆனார். இந்த சீசன் பிக்பாஸ் படத்தை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற உள்ளார், அனிதா தான் என்ற தகவல் இன்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதை வைத்து பார்க்கும் போது அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியுள்ளார், என தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் ‘எல்லாவற்றிற்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
Thanks for everything ????????
— Anitha Sampath (@anithasampath_) December 26, 2020