பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துவருகிறது.இந்த சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரியும் இருக்கிறார். அண்மையில் ஆரியின் திருமண நாளையொட்டி அவர் மனைவி பேசிய ஸ்பெசல் வீடியோவை பிக்பாஸ் ஒலிபரப்பினார். மனைவி நித்யாவும், தன் செல்ல மகளும் பேசுவதைக் கேட்டு ஆரி கண் கலங்கிவிட்டார். அவரது மனைவி ஆரிக்கு பால் கொலுக்கட்டை செய்து அனுப்பி வைத்திருந்தார். அந்த எபிசோடே அதனால் நெகிழ்ச்சியாக இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஆரி ஓவர் அட்வைஸ் மன்னனாக இருந்தார். இதனால் போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்தனர். அதேநேரம் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருந்தது. ஆரி,பாலா இடையேயான சண்டை சோசியல் மீடியாக்களிலும் தல, தளபதி சண்டையாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஆரி பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லிவிட்டதாக நெட்டிசன்கள் ஒரு குறும்படம் போடுகின்றனர். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது.
அந்த வீடியோவில், ஆரி தூங்குகிறார். பக்கத்தில் அனிதாவும், சனமும் சாய்ந்து படுத்துள்ளனர். நாய் குரைக்கும் சப்தம் கேட்டதும் நிஷா யார் தூங்கியது எனக் கேட்கிறார். உடனே ஆரி, அனிதாவைப் பார்த்து கைநீட்டினார். தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் பின்னாலேயே வந்து இதே கேள்வியைக் கேட்டதும், ஆரி நான் இல்லை என்பதைப் போல் தலையசைத்தார்.
நெட்டிசன்கள் இதை அரிச்சந்திரன் பொய் சொல்லி பார்த்தது இல்லையா? இதோ பாருங்கள் என பகிர்ந்துவருகின்றனர்.
#Day60 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/JpU5jyvkcv
— Vijay Television (@vijaytelevision) December 3, 2020