பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா! கடுமையாக திட்டு வாங்கிய ஷிவானி- வெளியான ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் மிகவும் வித்தியாசமான டாஸ்குகளை ஹவுஸ்மேட்ஸ்க்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அனிதா சம்பத் எலிமினேட் ஆனார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தலைவைராக ஆரி அர்ஜுனன் இருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 4 தமிழ் இறுதி போட்டியை எட்டியுள்ள நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் படத்தை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெறவுள்ளது. வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது வழக்கம் தான். ஷிவானியை பிரீஸ் ஆக்கிய பிக்பாஸ், முதன்முதலாக ஷிவானியின் அம்மாவை வீட்டிற்குள் அனுப்புகிறார்.

தாயை பார்த்ததும் கண்கலங்கிய ஷிவானி, கட்டிப்பிடித்து அழுகிறார். தனது மகளை கட்டியணைத்து அழுத அவர் வேறு யாருடன் பேசவில்லை. சிறிது நேரத்தில் மகளை தனியாக அழைத்த அவரது அம்மா, நீ எதுக்காக இந்த ஷோவுக்கு வந்த, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு வெளிய தெரியாதுன்னு நினைச்சியா? என கடுமையாக திட்டுகிறார். இதோ அந்த புரொமோ,

Leave a Reply

Your email address will not be published.