பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 87 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை எனவே ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் தற்போது பிக்பாஸில் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.
போட்டியாளர்கள் உறவினர்கள், குடும்பத்தினர் என தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போகிறார்கள். பாலாவின் அண்ணன், ரம்யாவின் அம்மா தம்பி, ரியோவின் மனைவி, ஷிவானியின் அம்மா ஆகியோர் வருகை தந்த நிலையில் தற்போது ஆஜித்தின் அம்மா, கேப்ரியல்லாவின் அம்மா ஆகியோர் வருகை தந்தார்கள். இதுவரை போட்டியாளர்களின் குடும்பம்ங்கள் உள்ளே நுழைந்து சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
ஆனால் ஒரு சில குடும்பத்தினர் தனது நகைச்சுவையான பேச்சால் பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக மாற்றி செல்கின்றனர். இந்நிலையில் ஆரியின் மனைவி மற்றும் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனராம். புரமோ வெளியாகும் முன்பே வீடியோ லீக்காகிவிட்டது. ஆரியின் மனைவி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!
#Promo3 #Aari family entry #BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossTamil pic.twitter.com/azlssm9W0d
— BIG BOSS 4 Paridhabangal (@BBPFriends20) December 31, 2020