பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் குடும்பம்! தம்பி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரம்யா- வெளியான ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை நோக்கி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் யார் வெற்றி பெற போவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் இந்த சீசனுக்கான Freeze டாஸ்கை நேற்று முதல் தொடங்கியது.

அப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக ஷிவானியின் தாயார் வந்திருந்தார். நுழைந்து சிறிது நேரத்திற்குள்ளே ஷிவானியை கண்டப்படி பேசி தள்ளினார். அதன் பின்னர் பாலாவின் அண்ணன் வந்து குதூகலமாக பேசி சென்றார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனின் தாயார் மற்றும் தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே வந்ததுமே, ரம்யா தாயை கட்டிப்பிடித்து என்னோட பேட்டரி வந்துருக்கு என கூறினார்.

மேலும், அவரின் தாய் அவ அழற டைப் எல்லாம் கிடையாது என சொல்ல அதற்கு சோமு அவ அழ வைக்குற டைப் என கிண்டலாக பேசுகிறார். இதன்பின்னர், ரம்யாவின் தம்பி இந்த வார டபுள் எவிக்‌ஷன் நடந்து நீ வெளியே வந்தனா காரணம் நீ கிடையாது என எச்சரிக்கிறார். அவர்கள் வந்ததில் இருந்து போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசி மகிழ்கின்றனர். இதோ அந்த புரொமோ,

Leave a Reply

Your email address will not be published.