பிக்பாஸ் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த ரியோ! சஸ்பென்ஸாக அழைத்த பிக்பாஸ்! வீடியோ இதோ…

பிரபல தொலைக்காட்சியில் இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4. மேலும் பிக்பாஸில் சென்ற வாரம் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நடந்தது. பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர். சென்ற வாரம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றுள்ளது. இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் அணைத்து போட்டியாளர்களும் எலிமினேஷன் ப்ரோஸஸ்க்கு நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரத்தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய டாஸ்க்கில் பாலா முதல் டாஸ்க்கின் வெற்றியாளர் ஆனார். இரண்டாவது டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து தூங்கிக்கொண்டிருந்த ரியோவிற்கு பிக்பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இன்றைய நிகழ்வில் தூங்கிக்கொண்டிருந்த ரியோவை பிக்பாஸ் சஸ்பென்ஸாக அழைக்கின்றார். இதனால் இன்ப அதிர்ச்சிக்குள் ஆளாகிய ரியோ செய்வதறியாது திகைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.