பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்போட்! வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலைமை மாறிவிட்டது. சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர். அந்தவகையில் சேலை அணிந்து, கவர்ச்சி புகைப்படத்தால் அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளீஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தது.

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி வாய்ப்புக் கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என்று தெரிகிறது. இந்த செய்தி ரம்யா பாண்டியன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *