பிக்பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்திய யார் தெரியுமா? யாரும் அறிந்திடாத தகவல்கள் இதோ…

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இதில் பல தெரிந்த பிரபலங்களும் சில தெரியாத பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவுடனே கமல் சார் நான் உங்கள் பாத்திட்டேன். நானே வெற்றியாளர். இது போதும், பிக்பாஸை விட்டு போறேன் என கூறி கமலையே ஆச்சர்யப்படவைத்தார். சரி பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தியை யார் என கேட்டார்கள்.

டிரோல்கள், சமூக வலைதளம் இல்லாத காலத்தில் பாட்டிகள் ஜாக்கிரதை என குறுந்தொடரில் நடித்தவர் பாட்டியாக நடித்தவர் சுரேஷ். இந்த முகத்தை எங்கேயோ பாத்த மாதிரி இருக்குனு நினைச்சவங்களுக்கும் இப்போ ஞாபகம் வந்திருக்கும் தானே. சரி, கமல் நடித்த அவ்வை சண்முகி படத்தின் பிரதிபலிப்பு தான் இந்த பாட்டிகள் ஜாக்கிரதை என்றும் கூறலாம். மேலும் சுரேஷ் 1991 ல் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தில் அதிராம்பட்டினம் சொக்கு ஆக காமெடியன் கேரக்டரில் நடித்திருந்தார்.

 

பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியையில் சில காலம் இயக்கினார். ஆஸ்திரேலியாவில் பனானா டிரீ என்ற ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறாராம். இங்கிருந்து படப்பிடிப்புகளுக்கு ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு உதவி வருகிறாராம். அன்புடன் ராமகிருஷ்ணன் என்ற நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து தயிர்சாத ரெஸிபி ஒன்றை செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார். அவரை பற்றி அவரின் தோழி ரம்யா கிருஷ்ணன் என்ன சொல்கிறார் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.