பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா- தர்ஷன் இணையும் புதிய படம்! வெளியான தகவல்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு இலங்கை பிரபலங்கள் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படம் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இத்திரைப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றார் என்பதும் இப்படத்தை அவருடைய உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கவுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் தர்ஷன் ஜோடியாக பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கவுள்ளதாகவும் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன் மற்றும் லொஸ்லியா ஆகிய இருவருமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பதும் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரே படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா ஜோடியாக நடிக்க இணைந்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத் திரைப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும், இப் படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!