பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே. முதல் வாரம் அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டாம் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி ரியோ ராஜ் இடையே மோதல் ஏற்பட்டாலும் .
கேபிரியால தலைவர் போட்டிக்கு நின்றபோது சுரேஷ் செய்த காரியத்தால் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், போட்டியில் சுவாரசியம் குறைவாக காணப்பட்ட போட்டியாளரான நடிகை ரேகா வெளியேறினார். அப்போது, வீட்டில் இருந்த போட்டியாளர்களில் அர்ச்சனா, ஷிவானி, பாலாஜி உள்ளிட்டோர் மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கி அழுதனர்.
அதில், முதன் முறையாக ஷிவானி அழுதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுவரை எதற்கும் கலங்காத ஷிவானியா இப்படி என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், தற்போது வீட்டை விட்டு வெளியேறிய ரேகா முதன்முறையாக தனது இன்ஸ்டாவில், பாலாஜி மற்றும் ஷிவானியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.