பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்ற பரிசு தொகையை ஆரி என்ன செய்ய போகிறார் தெரியுமா? வெளியான தகவல்- நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!

சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றல் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக நாளாவது சீசன் சில மாதங்கள் தள்ளிபோனாலும் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. வழக்கம் போல இல்லாமல் தற்போது பல இளம் பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தனர்.

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தாது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் போன வாரம் இறுதி போட்டி நடைபெற்று அனைவரும் எதிர்பார்த்தது போல மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யபட்டார். பல கோடி ரசிகர்களுக்கும் அவர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளித்தது.

ஏற்கனவே சமுதாய சீர் திருத்தங்களுக்ககவும், இயற்கை விவசாயதிர்க்ககவும் குரல் கொடுத்து வரும் அவர் தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு பங்கை மரம் நடுவதர்க்காகவும், ஆர்கானிக் விதைகளை வாங்குவதர்க்ககவும் மற்றும் செலவழிக்க உள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் இனி நாம் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதை விட்டு விட்டு தமிழில் கையெழுத்திடவும் பலருக்கும் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகளுக்கான அறிவுப்புகள் விரைவில் வரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *