பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கை நமிதா.. சமுத்திரகனியோடு படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா..?

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் ஏற்கனவே 4 சீசன்கள் முடிந்த நிலையில் இப்போது வெற்றிகரமாக 5 வது சீசன் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய பிக்பாஸில் முதல் சீசனிலேயே புகழின் உச்சிக்குப் போனார் ஓவியா. ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக விஜய் டிவியில் நேற்று தொடங்கியது.

இந்த சீசனில் ஆண் நடிகர்களை விட, பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் வரலாற்றில் முதன் முதலாக இந்த சீசனில் திருநங்கை ஒருவரும் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை களத்தில் உள்ளார். நமீதா மாரிமுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார். தொடர்ந்து திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை, மிஸ் இந்தியா, மிஸ் பாண்டிச்சேரி ஆகிய அழகிப் போட்டியிலும் வென்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு இவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இவர் சமுத்திரகனியின் நாடோடிகள் படத்தில் கூட நடித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது…