பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை எனவே ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் யார் வெற்றி பெற போவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா என அன்பு கேங்கில் இருந்து மூவரை வெளியேற்றிய அனிதாவை அன்பு கேங் டார்கெட் செய்து நாமினேஷனுக்கு கொண்டு வந்தது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனிதா சம்பத் தான். ஆரி மற்றும் பாலாவுடன் அனிதா சம்பத் இந்த வார ஆரம்பத்தில் வெடித்து சிதறியது தான் அவருக்கு ஓட்டுக்கள் குறைய காரணம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, தற்போது பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில், ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் இடம் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றுள்ளனர். எப்படியும் ஒவ்வொரு வாரமும் தப்பித்துகொண்டே இருந்த ஆஜித் இந்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.