பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இறுதிப்போட்டியாளர் யார் தெரியுமா? வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தீர்மானிக்கவிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் விளையாட்டு காரசாரமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ஒருவர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்துள்ளார். இதில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது.

இந்த வாரம் முழுவதும் பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. உடல் வலிமையும் மனவலிமையும் பரிசோதிக்கும் வண்ணம் அவைகள் அமைந்திருந்தது. அந்த வகையில் இந்த வாரம் முழுக்க நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையில் ரம்யா, ரியோ, சோம், பாலா ஆகியோருக்கு இடையே பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவரும் மிகக் குறைந்த பாய்ண்டு வித்தியாசத்திலேயே இருந்தனர்.

இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் டாஸ்க்கின் முடிவில் தான் இந்த டிக்கெட்டு டூ பினாலேவை யார் வென்று இந்த சீசனின் முதல் இறுதிப் போட்டியாளர் என்பதை நாம் கணிக்க முடியும். ஆனால் வைரலாகி வரும் தகவல்களின் அடிப்படையில் சோம் தான் அதிக பாயிண்டுகளை வென்று பிக்பாஸ் நான்காம் சீசனின் முதல் இறுதிப் போட்டியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *