விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்கள் ஈர்த்து வரும் ஜூலி திருமணம் கோலத்தில் மற்றும் மார்டன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது மிகவும் மார்டனாக முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது தனது தோலின் மேல் மெழுகுவர்த்தியை ஏற்றிகொண்டு நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகரகள் பலரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்..
Every candle deserves great respect because they light us by burning their bodies and destroying themselves! A candle in your hand is better than a star in the sky. Your soul is like a candle; when lit by love, it shines. #candlephotography pic.twitter.com/YR16nVhIyq
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) August 8, 2020