பிக்பாஸ் ஜூலியின் கிளாமர் போட்டோ ஷூட்..! ஏன் இப்படியெல்லாம் என விளாசி தள்ளும் நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்றிலிருந்து, இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர். ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார். அடிப்படையில் நர்ஸான ஜூலி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்தார். அதன்பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஆனாலும் மனம் தளராத ஜூலி, தொடர்ந்து தன் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வார். அந்தவகையில் ஜூலி இப்போது கிளாமரான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இது நயன்தாராவைப் போன்று போஸ் கொடுத்துள்ளதால் ஜுலியை பலரும் கலாய்த்தும், பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!