விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில சின்னத்திரையிலும், படத்திலும் நடித்து வருகின்றார். இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார் ஜூலி. அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பலரும் வாயடைத்து போனார்கள்.
இந்நிலையில் ஜுலி சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி உணர்த்துவதற்கு காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவர் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது நாடு முழுவதும் அதிர்ச்சயை ஏற்படுத்தியது. அதனால் விழிப்புணவர்வை ஏற்படுத்த ஜுலி வெளியிட்ட காணொளியினை தற்போது வெளியிட்டுள்ளார்.