பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் முக்கிய பிரபலம்! ஷாக்கில் ரசிகர்கள்..

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது. நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தான். 100 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். எலிமினேட் ஆன பிரபலங்கள் ஒவ்வொருத்தராக வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர். வரும் ஜனவரி 17ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக நிகழ்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர்.

அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து இதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஆசைப்படுவது யார் என பிக்பாஸ் கேட்பார். அதுபோல் அப்பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த சீசனில் கவின் வெளியேறியதை பார்த்தோம்.

அதேபோல் இம்முறை பிக்பாஸ் ஒரு தொகை கொடுத்து போட்டியாளர்களை கேட்க, அதை எடுத்துக்கொண்டு வெளியேற ரம்யா முடிவு செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த டுவிஸ்ட்டை ரசிகர்களும் எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.