பிக்பாஸ் குரலில் வெளியான புதிய ப்ரோமோ!! போட்டியாளர்கள் இவர்கள் தானாம்..!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் சீசன் 4 அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கவிருக்கிறது என தகவல்கள் வெளியாகின. இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர். இந்நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது.

அதையே அவ்வப்போது கட் செய்து புதிய ப்ரோமோ போல வெளியிட்டு வந்தனர். இப்படி ப்ரோமோ நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் பிக் பாஸ் குரலோடு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார் பிக்பாஸ் கமல் சார் ரெடியா? என கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.