பிக்பாஸ் ஆஜீத்தா இது? 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருக்கிறார் பாருங்க- காணொளி இதோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் யார் வெற்றி பெற போவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக நடந்த ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் இடம் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெரும் நபர் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்த வாரத்தின் இறுதியில் ஷிவானி அல்லது அஜீத் என இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஆஜீத் தான் குறைந்த வாக்குகள் பெற்று, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜீத் முதன்முதலாக ஜுனியர் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மிகவும் சிறுவயதில் நம்பிக்கையுடன் தனது அக்காவுடன் கலந்து கொண்ட காட்சியில் ஆஜீத்தின் பாடல் மற்றும் மகிழ்ச்சியினை காண முடிகின்றது. இக்காட்சியினை அவதானிக்கும் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் தற்போது கெத்தாக காணப்படும் ஆஜீத்தா இது? குழந்தை முகம் மாறாமல் தற்போதும் இருப்பதாக கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.