பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை திடீர் மரணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா. ஏற்கனவே செய்தி வாசிப்பின் மூலம் பிரபலமான அனிதாவிற்கு, இந்த பிக்பாஸ் நல்ல ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மேலும் கூடியது. சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்த அனிதா சம்பத், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இந்த புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாட விரும்புவதாக கூறியிருந்தார், ஆனால் எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்துள்ளது. ஆம், அனிதா சம்பத்தின் தந்தை இன்று உயிரிழந்தார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் இன்று மாரடைப்பால் இறந்துள்ளார், தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்று பின் சென்னை திரும்பும் போது ரயிலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் இன்னும் தனது தந்தையை நேரில் கூட பார்க்கவில்லையாம். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரின் தந்தையை குறித்து பேசிய அனிதா, “என் அப்பாவை நான் தொட்டுக் கூட பார்த்ததில்லை. அதனால் ஒரு ஆணின் பாசத்தை என் கணவரிடம் மட்டும் தான் உணர்ந்தேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!